அம்பேத்கர் தொடர்பான அவதூறு பேச்சு.! நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட விஎச்பி நிர்வாகி - ஜாமின் வழங்கிய நீதிபதி

Published : Oct 04, 2023, 10:17 AM ISTUpdated : Oct 04, 2023, 10:26 AM IST
அம்பேத்கர் தொடர்பான அவதூறு பேச்சு.! நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட விஎச்பி நிர்வாகி - ஜாமின் வழங்கிய நீதிபதி

சுருக்கம்

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைதான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஆர்.பி.வி.எஸ். மணியன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதையடுத்து ஜாமின் வழங்கி நீதிமன்றத் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

விஎச்பி நிர்வாகியின் சர்ச்சை பேச்சு

சென்னையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரான ஆர்.பி.வி.எஸ்.மணியன் (74), அம்பேத்கரை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியிருந்தார். "அரசியலமைப்பை உருவாக்கியது ராஜேந்திர பிரசாத் என்றே போட வேண்டும். அம்பேதகர் எழுதினார் என்று கூறுபவர்களுக்கு அறிவு இல்லை என்றார். அரசியல் சாசன சட்டம் தயாரிப்பதற்கான குழுவின் தலைவர் ராஜேந்திர பிரசாத் என்றும், அம்பேத்கர் அந்தக் குழுவில் வரைவுகளை சரி பார்க்கும் கிளார்க் பணியை மட்டுமே செய்தார். 

 மேலும்  திருவள்ளுவர் என்று ஒரு நபரே கிடையாது அப்படி ஒருவர் இருந்தார் என சொல்வதே கற்பனை. திருவள்ளுவர், திருக்குறள் என யாரோ ஒருவர் சொல்லிவிட்டார். அந்த நபர்தான் திருக்குறளை எழுதினார் என சொல்வது கற்பனை என மிகவும் மோசமாக பேசியிருந்தார். இதனையடுத்து அவர் மீது பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்திருந்த நிலையில் மாம்பலம் போலீஸாரால் கடந்த செப். 14 -ம் தேதி கைது செய்யப்பட்டார். 

அதிரடியாக கைது செய்த போலீஸ்

இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. தனது பேச்சுக்காக மன்னிப்பு கோருவதாக மணியன் தரப்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் அவருக்கு ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மணியன் தரப்பில் வழக்கறிஞர் பால்கனகராஜ் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.

நிபந்தனை ஜாமின் வழங்கிய நீதிபதி

மேலும் மணியனின் வயோதிகத்தை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அளித்த உத்தரவில், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பாக தினமும் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்

திமுகவிற்கு ஒரு வருடத்தில் ரூ.306 கோடி நன்கொடை கொடுத்தது யார்.? அங்கே பாஜகனா.! இங்கே திமுக- அறப்போர் இயக்கம்

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை 75,035 ஆக உயர்வு! தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
வாக்கு வங்கிக்காக நீதிபதிக்கு எதிராக தீர்மானமா.. எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா கடும் தாக்கு!