மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வருகிறது ஆப்பு - சொத்துக்கணக்கை விசாரிக்க பொது நல வழக்கு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

Asianet News Tamil  
Published : Dec 03, 2016, 11:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு வருகிறது ஆப்பு - சொத்துக்கணக்கை விசாரிக்க பொது நல வழக்கு  தலைமை நீதிபதிக்கு  பரிந்துரை

சுருக்கம்

அளவுக்கதிகமாக சொத்து சேர்த்துள்ள சென்னை மாநகராட்சி கவுன்சிலரின்  சொத்து விவரங்கள் தொடர்பான வழக்கினை தலைமைநீதிபதி பொதுநல வழக்காக விசாரிக்க நீதிபதி கிருபாகரன் பரிந்துரைத்துள்ளார்.

சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கும்படி சென்னை மாநகராட்சி மேயர், ஆணையர் ஆகியோருக்கு  சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் கோரிக்கை மனு கொடுத்தார்.

ஆனால், சென்னை மாநகராட்சிக்கு போதிய வருவாய் இல்லை. அதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லாம் நிவாரணம் வழங்க முடியாது என்று பதிலளித்தனர்.மாந்கராட்சியின் சொத்துவரி மிக மிக குறைவாக வசூலிக்கப்படுகிறது.

 கவுன்சிலருக்கு 12 வீடுகள் உள்ளது. அவர்தான் சொத்து வரியை தீர்மானிக்க வேண்டும் பின்னர் எப்படி சொத்து வரி உயரும் , கோடிக்கணகான ரூபாய் மதிப்புள்ள கட்டடங்களுக்கு 100 ரூபாய் 150 ரூபாய் வசூலிக்கின்றனர் என்று மனுதாரர் தரப்பில் தெரிவித்தனர்.

மாநகராட்சி கவுன்சிலர்களின் சொந்தவிருப்பு, வெறுப்பின் அடிப்படையில் இதுபற்றி முடிவு செய்யப்படுவதாகவும்  196-வது வார்டு கவுன்சிலருக்கு சொந்தமான 12 சொத்துக்களுக்கு, 55 முதல் 110 ரூபாய் வரை மட்டுமே சொத்து வரி விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கவுன்சிலர் அண்ணாமலையின் சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரிகள் அனைத்தையும் ரத்து செய்து, மீண்டும் ஆய்வு செய்து, சட்டப்படி தகுந்த வரியை நிர்ணயம் செய்யவேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட  வேண்டும் என கேட்டிருந்தார். 

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது , ஒரு கவுன்சிலருக்கே 12 வீடா , ஆடி காரா ? நான் ஆடியை மாதத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன் என்று வியந்த நீதிபதி   2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த மாநகராட்சி தேர்தலில், வெற்றிப் பெற்ற கவுன்சிலர்கள், தங்களது வேட்புமனுவுடன் தங்களது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்து இருப்பார்கள்.

 அந்த சொத்து விவரங்களை வருகிற வெள்ளிக்கிழமை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.  இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரனைக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பந்தபட்ட 196 வார்டு கவுன்சிலரின் சொத்துவிவரம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் அண்ணாமலைக்கு சொத்துக்கள் ஏதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி வேட்புமனுவில் தெரிவித்த சொத்துவிவரபட்டியல் குறித்து ஆணையம் ஆய்வு செய்யாதா ? மேலும் அது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று கேள்வி எழப்பினார்.மேலும் மனுதார்க்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கவும் அதேபோல் இந்த வழக்கை பொதுநல வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைசெய்தார்.

PREV
click me!

Recommended Stories

கணவர் ரொம்ப நல்லவர்! என் சாவுக்கு இவங்க தான் காரணம்! 6 மாத குழந்தையுடன் தாய்! கலங்க வைக்கும் கடைசி நிமிடம்!
கூட்டணிக்கு திமுக தலைமை: தொடர்வது நல்லதல்ல..! இடியை இறக்கும் காங்கிரஸ்..!