#Breaking:ஒரு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு..3 மாவட்டங்களில் மூன்று இலக்கங்களில் பாதிப்பு பதிவு..

By Thanalakshmi VFirst Published Jan 3, 2022, 8:23 PM IST
Highlights

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் மூன்று இலக்கங்களில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 
 

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1728 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 876 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,594 ஆக இருந்த நிலையில் இன்று ஒரு நாள்  பாதிப்பு 1,728 ஆக அதிகரித்துள்ளது.  சென்னையில் நேற்று 776 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 876 ஆக அதிகரித்துள்ளது.கொரோனா தொற்றிலிருந்து 662 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா தொற்றினால் இன்று ஒரு நாள் மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 10,364 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை அடுத்தபடியாக செங்கல்பட்டியில் 158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு எண்ணிக்கை 146 ஆக இருந்த நிலையில் இன்று 158 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து, கோவையில் இன்று ஒரே நாளில் 105 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நேற்று 80 ஆக பதிவான நிலையில் இன்று 105 ஆக உயர்ந்துள்ளது. சென்னை , செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களில் மூன்று இலக்கங்களில் பாதிப்பு எண்ணிகையானது பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூரில் 80 பேருக்கும் திருப்பூரில் 52 பேருக்கும் கன்னியாகுமரியில் 47 பேருக்கும் ஈரோட்டில் 40 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 38 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக உள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் 98 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 23 பேர் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் எந்த விதத்திலும் தொடர்பில் இல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 1700 பேர் ஒமைக்ரான் தொற்றினால் பாதிக்கப்படுள்ளனர். மகாராஷ்டிராவில் 510 பேருக்கும், டெல்லியில் 351 பேருக்கும் கேரளாவில் 156 பேருக்கும் குஜராத்தில் 136 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!