#Breaking: மாணவர்களே உஷார்.. இந்தெந்த வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம்.. அமைச்சர் விளக்கம்

Published : Jan 03, 2022, 07:27 PM IST
#Breaking: மாணவர்களே உஷார்.. இந்தெந்த வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயம்.. அமைச்சர் விளக்கம்

சுருக்கம்

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.  

தற்போது நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு வருகின்றன. அரையாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. குறிப்பாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி கிடையாது.  

இந்நிலையில் தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக பொது தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனிடையில் சமீபத்தில் பொதுத் தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்தும் வகையில், ஜனவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ள திருப்புதல் தேர்வு கூறிய தேதிகளை அரசு தேர்வுகள் துறை அறிவித்தது. 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 27ம் தேதி வரையிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் 28ம் தேதி வரையிலும் திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள திருப்புதல் தேர்வு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 21 முதல் 26 ஆம் தேதி வரையிலும் பன்னிரண்டாம் வகுப்பு மார்ச் 21 முதல் 29 தேதி வரையிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே ஏற்கனவே ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதத்தில் கண்டிப்பாக பொதுதேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

திருவல்லிக்கேணியில் இல்லம் தேடி கல்வி மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்துவைத்தார். மேலும் இல்லம் தெடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் கலைஞர்களுக்கு ரொக்க பரிசு வழங்கும் விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் தற்போதுவரை ஒட்டு மொத்தமாக 80,000 இல்லம் தேடி கல்வி மையங்கள் உள்ளதாக கூறிய அமைச்சர், இந்த திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, கூடுதலாக 1,70,000 மையங்கள் தேவைப்படுவதாகவும்  தெரிவித்தார்.

தமிழகத்தில் அமலில் உள்ள இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி 8ஆம் ஆண்டு வரை எந்த மாணவரையும் பெயில் செய்யக்கூடாது. இந்நிலையில், அத்துடன் சேர்த்து 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் ஆல்பாஸ் செய்யப் பள்ளிக்கல்வித் துறை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்