தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா… 2,500-ஐ நெருங்கும் தினசரி பாதிப்பு!!

Published : Jul 01, 2022, 09:02 PM IST
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா… 2,500-ஐ நெருங்கும் தினசரி பாதிப்பு!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,069 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,385 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,385 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,069 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,385 ஆக அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: குழந்தைகளை எளிதில் தாக்கும் கொரோனா..? பள்ளிகளில் முக கவசம் கட்டாயம்..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,025 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 909 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 1,025 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,026 ஆகவே உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 1,321 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,27,386 ஆக உள்ளது. 

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்வர் அவசர ஆலோசனை.!


மாவட்ட வாரியாக: அரியலூர் 9, செங்கல்பட்டு 369, சென்னை 1,025, கோயம்புத்தூர் 118, கடலூர் 13, தர்மபுரி 3, திண்டுக்கல் 11, ஈரோடு 26, கள்ளக்குறிச்சி 4, காஞ்சிபுரம் 84, கன்னியாகுமரி 72, கரூர் 3, கிருஷ்ணகிரி 17, மதுரை 49, மயிலாடுதுறை 4, நாகப்பட்டிணம் 5, நாமக்கல் 15, நீலகிரி 9, பெரம்பலூர் 14, புதுகோட்டை 9, ராமநாதபுரம் 3, ராணிப்பேட்டை 29, சேலம் 33, சிவகங்கை 20, தென்காசி 6, தஞ்சாவூர் 8, தேனி 6, திருப்பத்தூர் 5, திருவள்ளூர் 121, திருவண்ணாமலை 12, திருவாரூர் 8, தூத்துக்குடி 54, திருநெல்வேலி 64, திருப்பூர் 20, திருச்சி 67, வேலூர் 12, விழுப்புரம் 22, விருதுநகர் 39 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
ஊராட்சிகளில் கலப்பட பிளீச்சிங் பவுடர்... சிவகங்கை மாவட்டத்தில் அவலம்..!