கிள்ளிக் கொடுக்காம, அள்ளிக் கொடுங்க.. இல்லைனா??? திமுகவுக்கு கெடு விதிக்கும் காங்கிரஸ்!

Published : Dec 03, 2025, 03:43 PM IST
 Selvaperunthagai vs MK Stalin

சுருக்கம்

காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு திமுகவிடம் இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், காங்கிரசும் கூட்டணியை தொடர்வதில் உறுதியாக உள்ளன. இந்த கூட்டணியில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உள்ளன. கூட்டணியில் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை எந்த சிரமுமின்றி முடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

திமுக, காங்கிரஸ் கூட்டணி

பீகாரில் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் தமிழக தேர்தலில் காங்கிரசுக்கு தொகுதிகளை திமுக குறைக்கலாம் என தகவல் பரவின. இதனால் காங்கிரஸ் திமுகவை கை விட்டு விட்டு விஜய்ய்யின் த‌வெக கூட்டணியில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் காங்கிரஸ் திமுகவை விட்டு எங்கும் செல்லாது என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை உறுதி அளித்தார்.

காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு ஸ்டாலினுடன் சந்திப்பு

இதனைத் தொடர்ந்து திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த கிரிஷ் சோடங்கர், செல்வபெருந்தகை, எம்.என்.ஹெக்டே ஆகியோர் அடங்கிய குழுவை காங்கிரஸ் தலைமை அமைத்தது. இந்த நிலையில், இந்த குழுவினர் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்கள்.

பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை

இந்த சந்திப்பு முடிந்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வபெருந்தகை, ''முதல்வர் ஸ்டாலினை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. திமுகவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டவுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்படும்'' என்றார்.

கூடுதல் தொகுதிகள் கேட்க முடிவு

காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட பேச்சுவார்த்தை குழு திமுகவிடம் இந்த முறை கூடுதல் தொகுதிகளை கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த 2021 தேர்தலில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆகையால் இந்த முறை கூடுதல் தொகுதிகளை அதாவது 40 தொகுதிகள் வரை கேட்டே தீர வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.

லட்டு போல் இருக்கும் தவெக‌

தமிழகத்தில் பிரதான கட்சியான அதிமுகவும், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் திமுகவுக்கு மாற்றாக கூட்டணியில் சேர வேறு சாய்ஸ் இல்லாமல் காங்கிரசுக்கு இருந்து வந்தது. ஆனால் இப்போது நடிகர் விஜய்யின் தவெக லட்டு போல் வந்து சேர்ந்துள்ளது. இதனால் 'அதிக தொகுதிகள் கொடுக்கவில்லை என்றால் எங்களுக்காக தவெக கதவை திறந்து வைத்துள்ளது' என திமுகவிடம் கெடு விதிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்