நெல்லையில் வேட்புமனுவை வாபஸ் பெற்ற காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு: இதுதான் காரணம்!

By Manikanda PrabuFirst Published Mar 28, 2024, 12:10 PM IST
Highlights

நெல்லை மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவை காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு வாபஸ் பெற்றுள்ளார்

மக்களவைத் தேர்தல் 2024இல் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9, புதுச்சேரியில் 1 என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. 

கடந்த முறை காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட திருச்சி, தேனி, ஆரணிக்கு பதிலாக கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய 3 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நிலவியது. அதற்கு காரணம் நெல்லை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகள்தான். அந்த தொகுதிகளை பலரும் கேட்டு வந்ததால் இழுபறி நிலவியது. இதனால், அந்த தொகுதிகளை தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கு மட்டும் முதற்கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்த காங்கிரஸ் கட்சி, 25ஆம் தேதி நெல்லை தொகுதிக்கும், அதற்கு அடுத்தநாள் மயிலாடுதுறை தொகுதிக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.

பானை சின்னம் கோரி விசிக மேல்முறையீடு!

அதன்படி, நெல்லை தொகுதிக்கு ராபர்ட் புரூஸ் என்பவரும், மயிலாடுதுறை தொகுதிக்கு சுதா என்பவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், சீனியர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. அதனை உறுதி செய்யும் வகையில், நெல்லை மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பி. ராமசுப்பு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், நெல்லை மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவை காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்பு வாபஸ் பெற்றுள்ளார். தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தவே வேட்புமனுத் தாக்கல் செய்ததாகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஒருநாளும் எதிராக செயல்பட மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

click me!