ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை பிரசித்தி பெற்ற முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து தொடங்கினார்.
ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவோடு சுயேட்சையாக போட்டியிடுகிறார். இதற்காக வேட்பு மனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
undefined
அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிரசித்தி பெற்ற முத்தால பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான பால்குட வைபவம் இன்று நடைபெற்றது. திருவிழாவில் பாஜக ஆதரவோடு சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பிரசாரத்தை தொடங்கினார்.
நடிகர் விஜயுடன் இணைந்து செயல்பட தயார்; எம்பி ரவீந்திரநாத் தகவல்
பக்தர்கள், பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் தேனி எம்பி ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது கோவில் அருகில் இருந்த டீக்கடை ஒன்றில் சுட சுட பணியாரம் சாப்பிட்டார்.