
மறைந்த நகைச்சுவை நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசு. இவரின் மருமகள் மகேஸ்வரி நேற்று சென்னை போலிஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில் 'கட்டுமான நிறுவனத்தின் அதிபர் ஒருவருக்கும், தனக்கும் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பதாகவும், அந்த சொத்து பிரச்சனையை தான் கோர்டில் தீர்த்துக் கொள்வேன் என்று கூறியும். இந்த சொத்து பிரச்சனைக் காரணமாக கட்டுமான நிறுவனத்தின் அதிபரும், அவருடைய உறவினர் போலீஸ் அதிகாரி ஒருவருடன் சேர்ந்துக் கொண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தற்போது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.