2 குழந்தைக்கு தாயானவரை திருமணம் செய்யகூறி தாக்கிய நடிகை புவனேஸ்வரியின் மகன் அதிரடி கைது..!

Asianet News Tamil  
Published : Apr 20, 2018, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
2 குழந்தைக்கு தாயானவரை திருமணம் செய்யகூறி தாக்கிய நடிகை புவனேஸ்வரியின் மகன் அதிரடி கைது..!

சுருக்கம்

actress buvaneshwari son arrested

திருமணம் செய்ய மறுத்ததால் 2 குழந்தைக்கு தாயான பெண்ணை தாக்கியதாக கூறி பிரபல ஆபாச நடிகை புவனேஸ்வரியின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை விருகம்பாக்கதில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 32 வயதாகும் உதயா. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து தன்னுடைய 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் பேஸ் புக் மூலம் அறிமுகமாகியுள்ளார் நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன். சாதரணமாக துவங்கிய இந்த பழக்கம் நாளடைவில் அதிகரித்து அடிக்கடி மிதும் சீனிவாசன் உதயா வீட்டிற்கு சென்று வரும் அளவிற்கு மாறியுள்ளது.

திருமணம் செய்ய மறுப்பு:

மேலும் மீதும் சீனி வாசன், உதயாவிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் உதயா இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதை அறிந்ததால் இவரை திருமணம் செய்துக்கொள்ள மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த மிதுன் சீனிவாசன், உதயாவை நைசாக பேசி வளசரவாக்கத்தில் அமைந்துள்ள தன்னுடைய வீட்டிற்கு வர வைத்துள்ளார் . இவரை நம்பி உதயாவும் அங்கு சென்றுள்ளார்.

வற்புறுத்திய மிதும்:

அப்போது மிதுன் உதயாவிடம் தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து உதயா மறுக்கவே... ஒரு நிலையில் பொறுமை இழைந்து உதயாவை அடித்து, அவருடைய கையில் இருந்து விலை உயர்ந்த செல் போனை கீழே போட்டு உடைத்துள்ளார்.

கைது:

மிதுனிடம் இருந்து தப்பித்து, வெளியே வந்த உதயா இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலிஸ் நிலையத்தில் மிதும் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் மிதுனை போலீசார் கைது செய்து சிறையில் அடித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

பெண்களுக்கு ஜாக்பாட்.. இனி ரூ.1,000-க்கு பதில் 2,000? 2 நாளில் அறிவிப்பு.. அமைச்சர் குட்நியூஸ்!
சென்னையில் வரலாறு காணாத குளிர்..! மதியம் 1 மணிக்கும் டெல்லி, ஊட்டி போன்று நடுக்கம்!