அத்தியாவசியப் பொருள்கள் ரேஷன் கடைகளில் முறையாக வழங்கப்படுவதில்லை என்று புகார் மனு…

First Published Jan 3, 2017, 10:28 AM IST
Highlights


ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று குறைதீர் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்ர்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குன்னத்தூர் கிளைச் செயலர் எஸ்.இசக்கிமுத்து, துணைச் செயலர் எஸ்.பூலான், பொருளாளர் எஸ்.ஆறுமுகம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அதில் “பாளையங்கோட்டை வட்டம், குன்னத்தூரில் 3000 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு தெருவிளக்குகள் எரிவதில்லை; ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களும் முறையாக வழங்கப்படுவது இல்லை; கன்னியாகுடி - குன்னத்தூர் வரை குடிநீர்க் குழாய் பணிக்கு தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் இருக்கிறது; குன்னத்தூர், இராக்கன்திரடு, பூலான் குடியிருப்பு, கீழகுன்னத்தூர், சாமிநாதபுரம், மேலகுன்னத்தூர், இந்திராகாலனி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கான அரசு ஆரம்ப சுகாதார மையம் செயல்படாமல் இருக்கிறது; 100 நாள் வேலைத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு வேலை அளிப்பதில்லை; இத்திட்டத்தில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

click me!