ஆட்சியரை தகாத வார்த்தையால் திட்டிய பெண் மருத்துவர் மீது புகார்!

First Published Oct 24, 2017, 11:36 AM IST
Highlights
Complain about a female doctor


வேலூரில், டெங்கு ஆய்வுக்கு சென்ற ஆட்சியரை, தகாத வார்த்தையால் திட்டிய பெண் மருத்துவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் தினமும் 10 அல்லது 15 பேர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான செய்திகள் தினமும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில், வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தேவையில்லாத பொருட்களை அகற்றியும், டெங்கு விழிப்புணர்வு குறித்த டெங்கு பிரசுரமும் பொதுமக்களிடம் அளிக்கப்பட்டு வருகிறது. 

டெங்கு குறித்த ஆய்வு பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன், டெங்கு குறித்து சி.எம்.சி. காலணியில் ஆய்வு நடத்தினர். இதற்காக அவர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, டெங்கு குறித்து விழிப்புணர்வும், வீடுகளில் தேவையில்லாத பொருட்களை அகற்ற கூறியும் வந்தார்.

சி.எம்.சி. காலணியில் உள்ள ஒரு வீட்டில் ஆட்சியர் ராமன் நுழைந்தார். இதனை அறிந்த அந்த வீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், அனுமதியின்றி வீட்டில் எப்படி நுழையலாம் என்று ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி கேட்டார். இதனை அடுத்து, ஆட்சியர் ராமன், சோதனை செய்யாமல் திரும்பிச் சென்றார்.

வேலூர் சுகாதார மேற்பார்வையாளர் சசிகுமார், அந்த பெண் மருத்துவர் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளர். அரசு அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அந்த பெண் மீது புகார் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரை தகாத வார்த்தையால் திட்டியதாகவும் பெண் மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

click me!