மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் - ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் மாயம் சுற்றுலாவில் நேர்ந்த சோகம்

By Velmurugan s  |  First Published Mar 2, 2024, 2:24 PM IST

மாமல்லபுரம் கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒரு மாணவர் உயிரிழந்தார், 4 மாணவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர் மாவட்டம், நலகாம்பள்ளியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர்கள் 22 பேர் என இரு குழுக்களாக இன்று மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். அனைத்து புராதன சின்னங்கங்களையும் பார்த்த கல்லூரி மாணவர்கள் மொத்தம் 40 பேர் கடற்கரைக்கு சென்றனர். அங்கு  20-க்கும் மெற்பட்ட மாணவர்கள் கடலில் குளித்துள்ளனர். 

இதில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் 9 மாணவர்களை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது. உடன் கரையில் இருந்த சக மாணவர்கள் தங்கள் நண்பர்களை காப்பாற்ற கோரி கூச்சல் போடவே கடற்கரையில் புகைப்படம் எடுக்கும் பணியில் இருந்த மீனவர்கள் மணிமாறன், ராஜி, விஜி, சதீஷ் ஆகியோர் கடலில் சர்பிங் பலகையின் உதவியுடன் நீந்தி சென்று அலையில் சிக்கி உயிருக்கு போரடிய 4 மாணவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

மை வி3 ஆன்லைன் டிவி நிறுவனர் கைது; மருத்துவ அறிக்கையால் அம்பலமான நெஞ்சுவலி நாடகம்

பிறகு நலகாம்பள்ளியை சேர்ந்த விஜய்(24) என்ற மாணவர் மூச்சு திணறி உயிரிழந்தார். அவரது உடல் சிறிது நேரத்தில் கரை ஒதுங்கியது. மேலும் மாயமான அனந்தபூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பெத்துராஜ்(26), ஷேசாரெட்டி(25), நலகாம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மவுனீஷ்(18), பார்த்துஷா(19) ஆகிய 4 பேரை மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் கடலில் படகில் சென்று தேடி வருகின்றனர். 

பெரும் ரயில் விபத்தை் தவிர்த்த தம்பதிக்கு வெகுமதி வழங்கி ரயில்வே மேலாளர் பாராட்டு

மேலும் கடலில் மூழ்கி காப்பாற்றபட்ட 4 மாணவர்கள் செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் குணமடைந்தனர். கடலில் சீற்றம் அதிகமாக உள்ளது குறித்து பலமுறை நாங்கள் எச்சரித்து வருகிறோம். ஆனால் ஆபத்தை உணராமல் பலர் கடலில் குளித்து ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பது வேதனையாக உள்ளது என இங்கு மீட்பு பணியில் ஈடுபடும் புகைப்பட கலைஞர்கள் (மீனவர்கள்) வேதனை தெரிவித்தனர்.

click me!