மாணவிகளுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய கல்லூரி முதல்வர்; மாணவர்கள் போராட்டத்தால் முதல்வர் பணிநீக்கம்…

Asianet News Tamil  
Published : Aug 24, 2017, 08:04 AM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
மாணவிகளுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பிய கல்லூரி முதல்வர்; மாணவர்கள் போராட்டத்தால் முதல்வர் பணிநீக்கம்…

சுருக்கம்

college principal sent porn SMS to college students

நாமக்கல்

குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரில் முதல்வர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் முதல்வரின் கார் கண்ணாடியை உடைத்து போராட்டத்தால் ஈடுபட்டதால் கல்லூரி முதல்வர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள வளையக்காரனூரில் எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லூரி என்ற தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் முதல்வர் குமார் சார்லிபால் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசமாக எஸ்.எம்.எஸ். அனுப்பியதால் ஆத்திரம் அடைந்த கல்லூரி மாணவர்கள் முதல்வர் குமார் சார்லிபால் காரின் கண்ணாடியை உடைத்தனர்.

பின்னர் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டுவந்து கல்லூரி முன்பு சாலை மறியல் செய்ய முயற்சித்தனர். இதனையறிந்து குமாரபாளையம் காவல் ஆய்வாளர்கள் வேலுதேவன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களை சாலை மறியல் செய்யவிடாமல் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஆய்வாளர்கள் வேலுதேவன் கூறியது:

“கல்லூரி பிரச்சனை குறித்து நிர்வாகத்திடம் பேசி தீர்வு காண வேண்டும் என்றும், சாலை மறியல் செய்து சட்டம் - ஒழுங்கை கெடுக்கும் வகையில் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் கூறினார்.

இதனையேற்ற மாணவர்கள், இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுக்கப்பட்டு கல்லூரி முதல்வர் குமார் சார்லிபால் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பின்னர் கல்லூரிக்கு நேற்று முதல் வருகிற 27-ஆம் தேதி வரை விடுமுறையும் அளிக்கப்பட்டது.

PREV
click me!

Recommended Stories

இனி 'இந்த' இருமல் மருந்து கிடைக்காது.. தமிழக அரசு அதிரடி தடை.. பின்னணியில் பகீர் காரணம்!
தவெக Vs திமுக.. யாருடன் கூட்டணி? கையை தூக்குங்க! கடுப்பான தலைகள்.. என்ன நடந்தது?