Coimbatore to Shridi Train : ''கோவை - ஷீரடி'' நாட்டின் முதல் தனியார் ரயில்! - தமிழகத்திலிருந்து புறப்பாடு!

Published : Jun 10, 2022, 11:52 AM ISTUpdated : Jun 14, 2022, 11:44 AM IST
Coimbatore to Shridi Train  : ''கோவை - ஷீரடி'' நாட்டின் முதல் தனியார் ரயில்! - தமிழகத்திலிருந்து புறப்பாடு!

சுருக்கம்

Coimbatore to Shridi Private Train : இந்திய ரயில்வே துறையின் பாரத் கவுரவ் திட்டத்தின் முதல் தனியார் ரெயில் தமிழகத்தின் கோவையிலிருந்து தனது முதல் சேவையை இன்று தொடங்குகிறது. மற்றொரு ரயில் வரும் ஜூன் 21ம் தேதி டெல்லியிலிருந்து புறப்பட்டு நேப்பாள் நாட்டில் நுழைந்து 12 முக்கிய ராமர் ஸ்தலங்களில் பயணிக்கிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட கால அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த சிறப்பு ரயில் இன்று (ஜூன் 14ம் தேதி) கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் சாய்நகர் ஷீரடி வரை செல்கிறது. இது முழுக்க முழுக்க தனியார் சார்பில் இயக்கப்படுகிறது.

கோவையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திருப்பூருக்கு 7 மணி ஈரோடு 8 மணி, சேலம் 9.15, (15.6.2022) அன்று ஜோலார்பேட்டை இரவு 00.10, எலகங்கா அதிகாலை 5 மணிக்கும், தர்மாவரம் 6.20, மந்த்ராலயம் ரோடு 11.00 மணிக்கும், மாலை 4.00 மணிக்கு மந்த்ரா ரோட்டிலிருந்து புறப்பட்டு வாடி இரவு 7.15க்கும், (16.6.2022) அன்று காலை 7.25க்கு சாய்நகர் ஷீரடியை சென்றடையும்.

அதேபோல் மறுநாள் 17.6.2022 அன்று காலை 7.25க்கு சாய்நகர் ஷீரடியிலிருந்து புறப்பட்டு வாடி ரெயில் நிலையத்திற்கு மாலை 4.30 க்கும், தர்மாவரத்திற்கு இரவு 11.10க்கும், எலங்காவிற்கு 18.6.2022 காலை 2.10க்கும், ஜோலார்பேட்டைக்கு காலை 5.55க்கும், சேலம் 7.30க்கும், ஈரோடு 8.30க்கும், திருப்பூர் 10.25க்கும், கோவைக்கு நண்பகல் 12.00 மணிக்கு வந்து சேரும் என தெற்கு ரயில்வே தலைமை அலுவலக கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி இல்லாததால் ஆழ்கடலில் நிற்கும் சொகுசு கப்பல்.. திருப்பி அனுப்பியது புதுச்சேரி அரசு

ராமாயண யாத்ரா

ராமாயண யாத்ரா சர்க்யூட்டின் ஒரு பகுதியாக இந்த ரயில் நேபாளத்திற்கு செல்லும் என்று இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அறிவித்துள்ளது. இந்த ஐஆர்சிடிசியின் 'பாரத் கவுரவ்' ரயில், இந்தியாவிலிருந்து சர்வதேச எல்லையைக் கடந்து அண்டை நாட்டிற்குச் செல்லும் முதல் சுற்றுலா ரயிலாக மாற உள்ளது.

ஜூன் 21-ம் தேதி புது டெல்லியில் இருந்து புறப்பட்ட பிறகு, நேபாளத்தில் உள்ள ராமருடன் தொடர்புடைய இடங்களான தனுஷா பஹார், பவன் பிகா க்ஷேத்ரா, மா ஜாங்கி ஜன்மஸ்தலி மந்திர் மற்றும் ஸ்ரீ ராம் விவா ஸ்தல் ஆகிய இடங்களுக்கு ரயில் பயணிக்கும். பின்னர், ராமாயண சர்க்யூட்டில் உள்ள பல இந்திய மாநிலங்களையும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் பயணிக்கும்.

ராமரோடு தொடர்புடைய உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள், மற்றும் 12 முக்கிய நகரங்களான அயோத்தி, பக்சர், ஜனக்பூர், சீதாமர்ஹி, காசி, பிரயாக், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் மற்றும் பத்ராசலம் ஆகிய இடங்களை இந்த ரயில் பயணிக்கிறது. இது சுமார் 8,000 கி.மீ. வழித்தடங்களை கடந்து செல்கிறது.

இந்த ரயிலில் மொத்தம் 600 பயணிகள் பயணிக்க முடியும், ஒரு நபருக்கு தோராயமாக ரூ.65,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!