சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கிற்கு விருதா?... தமிழக அரசை உரசும் விமர்சனங்கள்

By vinoth kumarFirst Published Nov 25, 2018, 3:24 PM IST
Highlights

கடந்த சில நாட்களில் தமிழகத்தில் நடந்திருக்கும் வன்மங்கள் தேச அளவில் திகைப்பை கிளப்பியிருக்க, இப்படியொரு விருதை தமிழகம் பெற்றிருப்பது பெரும் விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து இணையதளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களாவன

தமிழக அரசு சமீபத்தில் நான்கு விருதுகளை பெற்றது. டெல்லியில் நடந்த நிகழ்வில் இவற்றை வாங்கினார் தமிழக முதல்வர். அவை முறையே...

* பெரிய மாநிலங்களில் அனைத்து துறைகளின் செயல்பட்டில் மிகச்சிறந்த மாநிலம். 
* சட்ட ஒழுங்கினை சிறப்பாக பராமரிப்பதில் மிக சிறந்த மாநிலம். 
* சுற்றுலா வளர்ச்சியில் மிகச்சிறந்த மாநிலம். 
* சட்ட ஒழுங்கு பராமரிப்பில் மிகச் சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம். 

இந்நிலையில் கடந்த சில நாட்களில் தமிழகத்தில் நடந்திருக்கும் வன்மங்கள் தேச அளவில் திகைப்பை கிளப்பியிருக்க, இப்படியொரு விருதை தமிழகம் பெற்றிருப்பது பெரும் விமர்சனங்களைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து இணையதளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களாவன...

*  கோயமுத்தூரை சேர்ந்த சூர்யா என்பவர் கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று பின் ஜாமீனில் வெளியே வந்தார். கோயமுத்தூர் கோர்ட்டில் கையெடுத்துப் போட வந்த அவரை, கோர்ட் வளாகத்தினுள்ளேயே வைத்து வெட்டிக் கொல்ல முயன்றது. தப்பித்து வெளியே ஓடியவரை கல்லூரி ரோட்டில் ஓட ஓட விரட்டி கடைகளுக்குள் நுழைத்து வெட்டியும், குத்தியும் சாய்த்திருக்கிறது. போலீஸ் அதிகாரிகளும், நீதித்துறை முக்கியஸ்தர்களும் குழுமியிருக்கும் கோர்ட்டுக்குள்ளேயே கொலை முயற்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.  இதுதான் சட்ட ஒழுங்கு சிறப்பான பராமரிப்பா?

* தலைநகர் சென்னையில் தேனாம்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு, அங்கிருக்கும் போலீஸ்காரர் தர்மன் மீது முன் விரோதம். அதுவும் தேவையற்ற, ஒருதலைப்பட்சமான கோபாம். இந்த வெறியில், பட்டப்பகலில் வாகனங்கள் பறக்கும்  நடுரோட்டில், பைக்கில் வந்த போலீஸ்காரரை இன்ஸ்பெக்டர்  பாய்ந்து சென்று தள்ளிவிடுகிறார், சரிந்து விழும் அவர் ஒரு சிறு டெம்போவின் அடியில் பைக்கோடு விழுந்து தலை மற்றும் காலில் காயமடைகிறார். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அவரை, போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று போகிற வழியில் அவர் வாயில் மதுவை ஊற்றி, குடித்துவிட்டு  பைக் ஓட்டியதாக சீனை உருவாக்கி அவரை சஸ்பெண்டும் செய்துள்ளார். 

ஆனால் போலீஸ் துறை வைத்த சி.சி.டி.வி.யின் மூலமாகவே இன்ஸ்பெக்டரின் அடாவடித்தனம் வெளியே வந்திருக்கிறது. ஆக போலீஸால் போலீஸின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலையில் தான் தமிழகம் உள்ளது. இந்த நிலையில் ‘சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம்’ என்று இரண்டாவது விருதா? இப்படி சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கிற்கு விருதுகளா? அவலம்.” என்று வெளுத்திருக்கின்றனர்.

 
 
ஆனால் இதற்கு ஆளும் கட்சி தரப்பிலிருந்து, “கோர்ட் வளாகத்தில் கொடூர கொலைகளையும், போலீஸே போலீஸை தாக்கும் சம்பவங்களையும் தமிழகம் தி.மு.க. ஆட்சியிலேயே கண்டிருக்கிறது. ஆனால் எங்களை மட்டும் விமர்சிப்பது ஏன்?” என்று மறுத்துக் கேட்டிருக்கின்றனர். இதற்கும் விடாமல், ”ஆனால் அம்புட்டு அழுக்கையும் வைத்துக் கொண்டு ‘மிஸ்டர் க்ளீன்’ எனும் விருதை அந்த அரசெல்லாம் வாங்கவில்லையே?” என்று பதிலுக்கு தாளித்திருக்கிறார்கள் விமர்சகர்கள். என்னத்த சொல்ல!?

click me!