பிடிப்பட்டது நாய்க்கறியா ? ஆட்டுக்கறியா வெளியானது அதிர்ச்சி தகவல்....!

By thenmozhi gFirst Published Nov 22, 2018, 2:18 PM IST
Highlights

பிடிப்பட்டது நாய்க்கறியா ? ஆட்டுக்கறியா வெளியானது அதிர்ச்சி தகவல்....! 

கடந்த 18 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்தடைந்த மண்ணை எக்ஸ்பிரஸ் ரயிலில் 20 பெட்டிகள் பார்சல் வந்தது. அதனை சோதனை செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அது நாய்க்கறி என கண்டறிந்து சென்னை கொடுங்கையூரில் அதனை ஒரே இடத்தில் கொட்டி எரித்தனர்.

இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு புறம் கொண்டுவரப்பட்ட அந்த கறிகள் ஆட்டுக்கறி என கூறி ஒரு பெண் உட்பட 25 க்கும் மேற்பட்டவர்கள் அந்த கறியை தங்களுக்கு தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இது நாய் கறியா அல்லது வேறு எதாவது கறியா..? மாட்டுக் கறியுடன் நாய்க்கறி சேர்த்து அனுப்பப்பட்டு உள்ளதா..? என பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வாருகின்றனர்.

இந்த நிலையில் இந்த கறியின் சில துண்டுகளை எடுத்து வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமானை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் அது எந்த கறி என்பதை கண்டுப்பிடிக்க முடியாமல் ஆய்வாளர்கள் திணறினர். எனவே இதற்காக தனிப்படை அமைத்து, டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, தற்போது சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. 

நடந்து முடிந்த சோதனையில், அது நாய்க்கறி அல்ல, ஆட்டிறைச்சி தான் என சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்து உள்ளது.
இருந்தாலும், நாய்க்கறி குறித்த அதிருப்தி மக்களிடேயே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
  

click me!