தமிழகத்தில் ஜன.25 வரை இதற்கு அனுமதி வழங்கக்கூடாது... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Jan 11, 2022, 3:24 PM IST
Highlights

ஜனவரி 25 ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஜனவரி 25 ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சேவல் சண்டை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து போட்டியில் கலந்து கொள்வதற்கு தற்போது சேவல்களை சண்டை சேவல் வளர்ப்போர் சங்கத்தினர் தயார்படுத்தி வருகின்றனர். கம்பம், சின்னமனூர், கூடலூர் மற்றும் கிராம பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், கெடா முட்டு, ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில், சேவல் சண்டையும் முக்கிய இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு சேவல் சண்டை நடத்துவதற்கு தமிழக அரசும் உயர்நீதிமன்றமும் தடை விதித்திருந்த நிலையில், இந்த வருடம் சேவல் சண்டை நடத்துவதற்கு பல விதிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜனவரி 25 ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பூலாம்வலசு கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். அதேபோல சேவல் சண்டை நடத்த கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜனவரி 25 ஆம் தேதி வரை சேவல் சண்டைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் சேவல் சண்டை போட்டிகள் நடத்துவது குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? கொரோனா பவவல் அதிகரித்து வரும் நிலையில் எவ்வாறு சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினர். இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே தேனி உத்தமபாளையம் பகுதியில் ஜனவரி 17ல் சேவல் சண்டை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. சேவல் சண்டையின் போது சேவலின் கால்களில் பிளேடு, கத்தி போன்றவற்றை கட்டக்கூடாது என்று நீதிபதி சுவாமிநாதன் அறிவுரை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!