இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முன்னதாக ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் 700க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மைக்கேல்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை சிறைபிடித்தனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் குற்றங்கள் நடக்கிறது, ஆனால்..? அமைச்சர் தங்கம் தென்னரசு கொடுத்த பதிலடி
மேலும் அதிலிருந்த மீனவர்கள் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுக்குறித்த அவரது கடிதத்தில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிங்க: பாலுக்கு அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயிக்க வேண்டும்... அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!!
ஏற்கனவே 98 மீன்பிடி படகுகள் இலங்கைன் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாக் ஜலசந்தியில் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.