தி.நகர்- மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

By Narendran S  |  First Published May 16, 2023, 7:34 PM IST

சென்னை, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 


சென்னை, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தியாகராய நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான ரங்கநாதன் தெரு. மேட்லி சாலை, மார்க்கெட் சாலை, நடேசன் தெரு ஆகிய இடங்களில் பாதசாரிகளின் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையிலும், இரயில் மற்றும் பேருந்து பயணிகள் சிரமமின்றி இரயில் மற்றும் பேருந்து நிலையத்தை அடைந்திட இந்த ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

Tap to resize

Latest Videos

மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்தை தியாகராய நகர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் வகையிலும், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்திலிருந்து இரயில்வே மார்க்கெட் சாலை, மேட்லி சாலை வழியாக தியாகராய நகர் பேருந்து நிலையம் வரை சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ், 28 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில், 7 மீட்டர் உயரத்தில், 570 மீட்டர் நீளம் மற்றும் 4.20 மீட்டர் அகலத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய ஆகாய நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மரக்காணத்தில் விற்கப்பட்டது கள்ளச்சாராயம் அல்ல… காவல்துறை விளக்கம்!!

இந்த ஆகாய நடைமேம்பாலமானது பல்வகை போக்குவரத்தினை ஒருங்கிணைக்கும் வகையில், தென் தமிழகத்திலிருந்து வரும் இரயில் பயணிகள் மற்றும் மின்சார தொடர்வண்டியில் பயணிக்கும் பயணிகள் சிரமமின்றி தியாகராய நகர் பேருந்து நிலையத்தை அடையும் வண்ணம், மாம்பலம் இரயில் நிலைய நடைமேம்பாலத்துடன் நடைமேம்பாலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

click me!