தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள்? பிப்.14 அன்று மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

Published : Feb 11, 2022, 04:48 PM IST
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள்? பிப்.14 அன்று மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

சுருக்கம்

தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் 30 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 3 ஆயிரமாக குறைந்துள்ளது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள் ஊரடங்கு போன்றவை ரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முழுவதுமாக நீக்கலாம் என தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

குறிப்பாக திரை அரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 14 ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும் அதே சமயம் கொரோனா தாக்கம் குறைந்து வந்தால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் முடிவு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை
எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்