
உண்மையை நிரந்தரமாக யாராலும் மறைக்க முடியாது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து உள்ளார்
சென்னை நுங்கம்பாக்கம் தனியார் விடுதியில் நடந்த தென்னிந்திய ஊடக கருத்தரங்கை ஆளுநர் தெரிவித்தார்...
இந்திய ஜனநாயத்தில் ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், தென்னிந்தய ஊடகங்கள் மிக சிறப்பாக செயல்படுகிறது என்று பெருமிதமாக பேசினார்
மேலும், மக்களின் எண்ணங்களை எதிரொலித்து மிக சிறப்பாக தென்னிந்தி ஊடகங்கள் செயல்பட்டு வருகிறது என்றும் புகழாரம் சூட்டினார்
மேலும், தான் 40 ஆண்டு காலம் பத்திரிகை துறையில் இருந்ததால், பத்திரிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை என்னவென்று தன்னால் உணர முடிகிறது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
சூரியனை மேகங்கள் மறைத்தாலும், நிரந்தரமாக மூடிவிட முடியாது அதுபோல உண்மையை யாராலும் மறைக்க முடியாது என ஆளுநர் தெரிவித்து உள்ளார்.
இந்த விழாவில்,பாரதி மேட்ரிமானி தலைமை நிர்வாக இயக்குனர் முருகவேல் ஜானகிராமன், போர்த் மீடியா டைமென்ஷன் தலைமை நிர்வாக இயக்குனர் திரு.ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றனர்
மேலும், இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலான ஊடகவியாளர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.