சென்னை மழை போல முதலீடும் மழையாக பெய்யும்.! கோட் சூட் அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன்.? ஸ்டாலின் விளக்கம்

By Ajmal KhanFirst Published Jan 7, 2024, 1:49 PM IST
Highlights

கடந்த இரண்டரை ஆண்டுகளாக, முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறோம். அனைத்துத் துறைகளிலும், தமிழ்நாட்டை நாங்கள் முதன்மை பெறச் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், இன்றும் நாளையும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று தொடங்கிய மாநாட்டில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஒப்பந்தங்களை கையெழுத்தானது. இதனை தொடர்ந்து முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,   பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்லும்போதுதான் நான் சூட் போடுவது வழக்கம். ஆனால் இங்கு எல்லா வெளிநாடுகளும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிட்ட காரணத்தால், இங்கே நான் கோட் சூட் அணிந்து வந்திருப்பது பொருத்தமாக உள்ளது. இன்று காலையிலிருந்து சென்னையில் மழை பெய்து கொண்டிருக்கிறது. நான் இங்கு வந்தவுடன், முதலீடும் மழையாக பெய்யும் என்ற நம்பிக்கை எனக்கு வந்துள்ளது.

Latest Videos

தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருப்பது ஏன்.?

தொழில் துறையில் மேன்மையும், தனித்த தொழில்வளமும் கொண்ட மாநிலம்தான், தமிழ்நாடு! பண்டைய காலத்தில் இருந்து கடல் கடந்தும் வாணிபம் செய்தவர்கள்! அதனால்தான், "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று தொழிலை ஊக்குவிக்கும் பழமொழி உருவானது! இந்தியாவுக்கு பல்வேறு வகைகளில் தமிழ்நாடு, முன்மாதிரி மாநிலம்! 1920-ஆம் ஆண்டு 'தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பு' எனப்படும் தொழிலதிபர்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. இதனால்தான் தமிழ்நாடு அனைத்து வகைத் தொழில்களிலும், முன்னேறிய மாநிலமாக இன்றைக்கு இருக்கிறது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற மாநிலமாக இருப்பதால், இதற்கான திறமையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக கிடைத்தார்கள்.சிறந்த தொழில் அதிபர்களும், திறமையான தொழிலாளர்களும் நிறைந்த தமிழ்நாட்டுக்கு,  உலகத் தொழில் முனைவோரான நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

மாணவர்களுக்கு அழைப்பு

நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்பதுடன் எனது உளமார்ந்த நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில், அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்கள். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

 எட்டு துறைகள் சார்ந்த பெரிய தொழிற்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்களுக்கான அரங்குகள் மற்றும் தமிழ்நாடு சூழலமைப்பு அரங்கம் என்று பல்வேறு விதமான அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கிறது. பன்னாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு, பங்குதாரர் நாடுகள் தமிழ்நாட்டின் உடனான தங்களுடைய ஆழமான மற்றும் நீண்டகால ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, 3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்பட, எதிர்கால சந்ததியினரை இம்மாநாட்டிற்கு ஈர்த்துள்ளோம். புத்தொழில்களுக்கென்று ஒரு தனி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் முதலீட்டாளர்கள், இந்தத் துறை சார்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடுவார்கள்! குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சார்பில் 'வாங்குவோர் - விற்பனையாளர் சந்திப்பு' ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு

இது மூலமாக 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள், 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விற்பனையாளர்களுடன் கலந்துரையாடுவார்கள்! உலகம் முழுவதும் இருக்கின்ற முதலீட்டாளர்களுடன் தொடர்புகொண்டு, அவர்களது முதலீடுகளை நாங்கள் கோரியுள்ளோம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக, முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறோம். அனைத்துத் துறைகளிலும், தமிழ்நாட்டை நாங்கள் முதன்மை பெறச் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ வேண்டும் என்பதே எங்களது இலட்சியம்! இந்த முயற்சிகளுக்கு மகுடம் சூட்டிடும் வகையிலும், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டின் வலிமையை உலகிற்குத் தெரிய வைத்திடும்!

இங்கு உரையாற்றுவது கூடியிருக்கும் உள்ளபடியே முதலீட்டாளர்களாகிய எனக்கு உங்கள் மிகுந்த மகிழ்ச்சி மத்தியில் அளிக்கிறது. தொழில்துறையில் பெரும் சாதனை படைத்த அனுபவசாலிகள் இந்த அரங்கில் நிறைந்துள்ளீர்கள். இங்கு பல ஆண்டுகளாக தொழில் புரியும் அனுபவமும் உங்களுக்கெல்லாம் உள்ளது. சுருங்கச் சொன்னால், உங்களையும், உங்கள் வணிகத் திட்டங்களையும், உலகளாவிய முதலீட்டாளர்களோடு இணைத்துக் கொள்ளும் பொன்னான வாய்ப்பினை நாங்கள் இந்த மாநாடு ஏற்படுத்தித் தந்துள்ளோம். மூலமாக தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்! அனைவரும் சேர்ந்து எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்! ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நனவாக்குவோம் வாருங்கள் என மனதார அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த இரண்டரை ஆண்டுகளாக, முதலீட்டாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறோம். அனைத்துத் துறைகளிலும், தமிழ்நாட்டை நாங்கள் முதன்மை பெறச் செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறோம். அது மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும் திகழ வேண்டும் என்பதே எங்களது இலட்சியம்! இந்த முயற்சிகளுக்கு மகுடம் சூட்டிடும் வகையிலும், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாட்டின் வலிமையை உலகிற்குத் தெரிய வைத்திடும்!

தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்

இங்கு உரையாற்றுவது கூடியிருக்கும் உள்ளபடியே முதலீட்டாளர்களாகிய எனக்கு உங்கள் மிகுந்த மகிழ்ச்சி மத்தியில் அளிக்கிறது. தொழில்துறையில் பெரும் சாதனை படைத்த அனுபவசாலிகள் இந்த அரங்கில் நிறைந்துள்ளீர்கள். இங்கு பல ஆண்டுகளாக தொழில் புரியும் அனுபவமும் உங்களுக்கெல்லாம் உள்ளது. சுருங்கச் சொன்னால், உங்களையும், உங்கள் வணிகத் திட்டங்களையும், உலகளாவிய முதலீட்டாளர்களோடு இணைத்துக் கொள்ளும் பொன்னான வாய்ப்பினை நாங்கள் இந்த மாநாடு ஏற்படுத்தித் தந்துள்ளோம். மூலமாக தமிழ்நாட்டில் முதலீடு செய்யுங்கள்! அனைவரும் சேர்ந்து எதிர்காலத்தை பகிர்ந்து கொள்வோம் வாருங்கள்! ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நனவாக்குவோம் வாருங்கள் என மனதார அழைப்பு விடுக்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். 

இதையும் படியுங்கள்

வேற லெவலில் முதல்வர் ஸ்டாலின்.. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு தமிழை புரிய வைக்க இப்படி ஒரு ஐடியா

click me!