கருணாநிதி வாழ்க்கையை கவிதையாக எழுதுங்கள்... வைரமுத்துவிடம் அன்பு கட்டளையிட்ட ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Jan 2, 2024, 7:48 AM IST
Highlights

எரி உடைவது போல வானம் உடைந்து கனமழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கனமழை பெய்யும் என கூறினார்களே தவிர எவ்வளவு மழை பெய்யும் என கூறவில்லை. 100 ஆண்டில் இல்லாத மழை 170 ஆண்டுகள் இல்லாத மழை என கூறினார்கள் எதனால் இந்த மழை என கூறவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வைரமுத்துவின் பிஆர்ஓ நான்- கமல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிங்க வைரமுத்துவின் 39 வது புத்தகமான மகா கவிதை புத்தகம்  வெளியிட்டு விழா நடைபெற்று நிகழ்ச்சியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Latest Videos

மேலும் மகா கவிதை புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் பெற்றுகொண்டார். இதனை தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், 40 வருடமாக நான் வைரமுத்துவின் பி.ஆர்.ஓ தான், வைரமுத்துவின் கவிதைகளை படித்தப்பின் இவர் எனக்கு பாடல் எழுத வேண்டும் என இளையராஜாவிடம் கேட்டேன்.வெற்றிகளை பார்த்துவிட்ட தோரணையில் இன்று வைரமுத்து அமர்ந்துள்ளார், 

தமிழர்களுக்கு கிரீடம்

இதே தோரணையில் தான் தன் ஆரம்ப காலத்திலும் இருந்தார்.  காலையில் கண்ணதாசன் அமர்ந்து பாடல் எழுதிய அதே இடத்தில் மாலை வைரமுத்து அமர்ந்து பாடல் எழுதினார், அன்றே வைரமுத்து மிகப்பெரிய உயரத்துக்கு வருவார் என கணித்தேன். வைரமுத்துவின் பெருமை எல்லாம் எல்லா தமிழர்களுக்கும் கிரீடம், சினிமா பாடல் எழுதும் போது நாங்கள் எத்தனை திருத்தங்கள் கேட்டாலும் செய்து தருவார். மகா கவிதை எனும் இந்த புத்தகம் நமக்காக அவர் எழுதியது பல வரிகள் மிகவும் அழுத்தமாக உள்ளது, இந்த புத்தகம் இன்று 400 ரூபாய்க்கு கிடைக்கிறது என சொன்னார்கள். இந்த புத்தகம் கிடைக்கவே கிடைக்காது எனும் சொல்லும் அளவுக்கு அத்தனை பிரதிகள் விற்கும் என வாழ்த்துகிறேன், மகா கவிதை எனும் நூலை மகாகவி வழியில் பாடும் கவிஞன் எனும் பெருமையை வைரமுத்து பெற்றுவிட்டார். 

கருணாநிதி வாழ்க்கையை கவிதையாக எழுதுங்கள்

இதனை தொடர்ந்து மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், நான் கவிஞனும் அல்ல,கவிதை விமர்சகன் அல்ல,கவிஞராகவும் கவிதை விமர்சகராக கோலோச்சி இருந்த  கலைஞர் இருந்து இருந்தால் மகா கவிதை தீட்டிய வைரமுத்துவை உச்சி முகர்ந்து பாராட்டி இருப்பார். ஒரு கவிஞர் இன்னொரு கவிஞரை பாராட்ட மாட்டார் அப்படியே பாராட்டினாலும் விமர்சனம் செய்து பாராட்டுவார்கள் ஆனால் கலைஞர் கவிதை நன்றாக இருந்தால் பாராட்டுவார். கவிப்பேரரசு பட்டம் வழங்கியது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான். எல்லா நதியிலும் என் ஓடம் என அவர் சொல்லி கொண்டாலும் அவை வந்து சேரும் இடமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இருந்தார் இவர் எழுதிய 15 புத்தகங்களை கலைஞர் வெளியிட்டார்

கலைஞர் வாழக்கை வரலாற்றை கவிதையாக எழுத வேண்டும், இதை நீங்கள் செய்ய வேண்டும்,இது உங்கள் ரசிகனின் வேண்டுகோள்,இன்னும் உரிமையாக சொல்ல வேண்டும் என்றால் இது என் கட்டளை என்றார். தமிழில் அறிவியல் கவிதை குறைவு,அந்த குறையை போக்கி உள்ளார் வைரமுத்து இந்த நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும், நாம் எதிர்கொள்ள உள்ள மிக பெரிய சவால் காலநிலை மாற்றம் என நான் பல இடங்களில் கூறி உள்ளேன்.

பெரு மழைக்கான காரணம் என்ன.?

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றதிற்காக 500 கோடி ஒதுக்கி உள்ளோம். 21% விழுக்காடாக உள்ள காடுகளின் அளவை 33%  மாக 10 ஆண்டுகளில் உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். காலநிலை மாற்றம் குறித்து அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்க காலநிலை அறிவு இயக்கத்தை தமிழகத்தில் செயல்படுத்த உள்ளோம் இதற்காக தமிழ்நாடு GREEN CLIMATE COMPANY உருவாக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கிணைக்க காலநிலை மாற்ற நிர்வாக குழு எனது தலைமையில் உருவாக்கப்பட்டு உள்ளது. நவீன அறிவியலை சொல்ல திறன் உள்ளது தமிழ் மொழி என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த புத்தகம் அமைந்துள்ளது. மிக முக்கியமான காலகட்டத்தில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்,புயலும் வெள்ளமும் சென்னை முதல் தென் மாவட்டம் வரை சுற்றி சூழல் அடித்த நேரத்தில் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

எரி உடைவது போல வானம் உடைந்து கனமழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கனமழை பெய்யும் என கூறினார்களே தவிர எவ்வளவு மழை பெய்யும் என கூறவில்லை. 100 ஆண்டில் இல்லாத மழை 170 ஆண்டுகள் இல்லாத மழை என கூறினார்கள் எதனால் இந்த மழை என கூறவில்லை ஆனால் வைரமுத்து இந்த புத்தகத்தில் கூறியுள்ளதாக குறிப்பிட்டார். 

இதையும் படியுங்கள்

பொங்கல் பரிசு எவ்வளவு? தமிழக அரசின் திட்டம் இதுதான்!

click me!