கல்லூரி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவன் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிதி உதவி அறிவித்துள்ளார்.
கல்லூரி மாணவன் பலி
கல்லூரி முடிந்து ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பிய மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்ட மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், கடலூர் வட்டம், தேவனாம்பட்டினம் கிராமம் கடற்கரை சாலையில் நேற்று (11-10-2023) மதியம் அப்பகுதியிலுள்ள கலைக்கல்லூரி மாணவ, மாணவியர் கல்லூரி முடிந்து ஷேர் ஆட்டோவில் கடலூருக்கு வந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த,
நிவாரண உதவி அறிவித்த முதலமைச்சர்
பண்ருட்டி வட்டம், சிறுவத்தூர் (அ), மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் த/பெ.சரவணன் (வயது 20) என்ற மாணவர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பெற்றோருக்கும். உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
கோயில் விளைநிலங்களுக்கான குத்தகை நெல் பாக்கியை தள்ளுபடி செய்யுங்கள்! -அன்புமணி