1,000 யூனிட் மின்சாரம் இலவசம்!.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க ஸ்டாலின் - யாருக்கு தெரியுமா.?

By Raghupati R  |  First Published Mar 3, 2023, 6:45 PM IST

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகி உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், விசைத்தறிக்கு 3 நிலையிலான மின் கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்து, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Latest Videos

இதையும் படிங்க..AIADMK: அகம்பாவம்.. ஆணவம்.! அதிமுகவின் தோல்விக்கு துரோகி எடப்பாடி தான் காரணம் - கொந்தளிக்கும் ஓபிஎஸ்

மேலும், இதுபோன்று கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1 முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்

click me!