
திருநெல்வேலி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, மத்திய பாஜ.க அரசுக்கு துணை போகக் கூடாது என்று வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் திருநெல்வேலி சந்திப்பு இரயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் காசி விசுவநாதன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் சத்யன், பெரும்படையார், பொருளாளர் கசமுத்து, மாநிலக்குழு உறுப்பினர்கள் பொன்னுச்சாமி, போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
“தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மத்திய பா.ஜனதா அரசுக்கு துணை போகக் கூடாது.
தமிழக உரிமைகளை பறிகொடுக்க கூடாது” உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், மாவட்ட அலுவலகச் செயலாளர் ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.