மத்திய அரசுக்கு எப்படி அழுத்தம் தரணும்னு முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியும் - துரைக்கண்ணு...

 
Published : Apr 07, 2018, 11:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:13 AM IST
மத்திய அரசுக்கு எப்படி அழுத்தம் தரணும்னு முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் தெரியும் - துரைக்கண்ணு...

சுருக்கம்

Chief Minister and Deputy Chief Minister know how to pressure central government - duraikannu

தஞ்சாவூர் 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எந்த வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ? அதன்படி அழுத்தம் கொடுக்கின்றனர் என்றார் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா உள்ளிக்கடையை சேர்ந்தவர்கள், கும்பகோணம் அருகே உள்ள சோழன்மாளிகையில் நடந்த காதணி விழாவில் பங்கேற்க வேனில் சென்றனர். 

இவர்கள் கபிஸ்தலம் அருகே சோமேஸ்வரம் திருப்பத்தில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ஒருபக்கமாக கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும், 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். 

காயமடைந்தவர்கள் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை, அமைச்சர் துரைக்கண்ணு நேற்று பார்த்து ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியும் வழங்கினார். 

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், முன்னாள் தொகுதி செயலாளர் துரை.திருஞானம், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மருத்துவகல்லூரி பகுதி அ.தி.மு.க. செயலாளர் வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதன்பின்னர் அமைச்சர் துரைக்கண்ணு செய்தியாளர்களிடம், "வேன் கவிழ்ந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக வந்தேன். 

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எந்த வகையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமோ? அதன்படி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மேலும், உச்ச நீதிமன்றத்தின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்" என்று அவர் 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!