Chidambaram : சிதம்பரத்தில் 144 தடை உத்தரவு ‘திடீர்’ வாபஸ்..பின்னணியில் நடந்தது என்ன ?

By Raghupati R  |  First Published Mar 25, 2022, 8:53 AM IST

பொதுமக்கள் நலன் கருதி 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி கூறியுள்ளார்.


சிதம்பரம் கோவில் சர்ச்சை :

சிதம்பரம் நடராஜர் கோயிலில் முக்கிய விஐபிக்களுக்கு மட்டுமே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதால் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய சிதம்பரம் தீட்சிதர்கள் தடை விதித்தனர்.

Tap to resize

Latest Videos

பல்வேறு போராட்டங்கள் :

இதற்கு அனுமதி அளிக்கக் கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே சமீபத்தில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய சென்ற பெண்ணை சாதிப்பெயரை சொல்லி திட்டியாக சர்ச்சை எழுந்தது. அப்பெண் அளித்த புகாரில் சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 20 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

144 தடை உத்தரவு வாபஸ் :

இதற்கிடையே கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்ககோரி பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தச் சூழலில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அடுத்த ஒரு மாதத்திற்கு அரசியல் கட்சிகள், பக்த பேரவைகள் மற்றும் இதர போராட்ட குழுவினர் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டது.

சிதம்பரத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வாபஸ் பெறப்பட்டு இருக்கிறது.பொதுமக்கள் நலன் கருதி 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி கூறியுள்ளார்.

click me!