CRIME : சென்னையில் 6000 ரவுடிகளுக்கு செக்.! பட்டியல் தயார்.! யார் எங்கே இருக்காங்க.? கமிஷனர் அதிரடி

Published : Jul 10, 2024, 07:46 AM IST
CRIME : சென்னையில் 6000 ரவுடிகளுக்கு செக்.! பட்டியல் தயார்.! யார் எங்கே இருக்காங்க.? கமிஷனர் அதிரடி

சுருக்கம்

சென்னையில் பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டுள்ள ரவுடிகள் தொடர்பாக கணக்கெடுக்க கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் மட்டும் 6000 ரவுடிகளின் பட்டியில் கையில் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ரவுடிகளின் வீடுகளுக்கு போலீசார் நேரில் சென்று விசாரிக்கவுள்ளனர். 

தமிழகத்தில் தொடரும் கொலைகள்

தமிழகத்தில் தொடர் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்திருப்பதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. போதை பொருட்கள் விநியோகமும் அதிகமாக இருப்பதால் இது போன்ற குற்ற சம்பவங்களில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபடுவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. மேலும் திமுக அரசு சட்டம் ஒழுங்கை சரிவர கையாலவில்லையென விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேசிய கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். 

ரவுடிகளுக்கு எச்சரிக்கை

இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண் சென்னை பெருநகர காவல் ஆணையராக பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. பொறுப்பேற்ற முதல் வேளையாக செய்தியாளர்களை சந்தித்த அருண், ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார். சட்ட ஒழுங்கு பாதுகாப்பது குற்ற நடமாட்டங்கள் தடுப்பது. நடந்த குற்றங்களின் ஈடுபட்டவர்களை கைது செய்வது மற்றும் ரவுடிகளுக்கு அவர்களுக்கு ஏற்ற மொழியில் பதில் அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு என பல்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்ட 6000 குற்றவாளிகள் இருப்பிடத்திற்கு நேரில் சென்று அவர்கள் தற்பொழுது எங்கு வசிக்கிறார்கள்.

ரவுடிகள் கணக்கெடுப்பு

என்ன செய்து கொண்டுள்ளார்கள் என்பதை  உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்படி அவர்கள் வசிக்க வில்லை என்றால் எங்கு இருக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரிக்க வேண்டும் என கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். ரவுடிகள் கணக்கெடுக்கும் பணியானது அனைத்தும் துணை ஆணையர் நேரடியாக கண்காணிப்பில் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் குற்றவாளிகளுடன் தொடர்பில் உள்ள காவல் ஆய்வாளர்கள் முதல் காவலர்கள் வரை தொடர்பில் உள்ளவர்களை உளவுத்துறை அவர்களுக்கு குறித்து தகவல் அளிக்க வேண்டும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

குண்டாஸ் வழக்கில் ஜெயிலுக்கு போன உங்களை வாழும் மகாத்மா என அழைக்கவா? செல்வப்பெருந்தகைக்கு அண்ணாமலை கேள்வி!

PREV
click me!

Recommended Stories

2026 தேர்தலில் மக்கள் விரும்பும் கட்சி ஆட்சியை பிடிக்கும் ! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
சின்ன காத்துக்கே 'அட்டை' பறந்துடும்.. விஜய்யை சீண்டிய உதயநிதி.. அமித்ஷா மீதும் அட்டாக்!