
தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை ஒட்டிய, வங்க கடல் பகுதியில், ஆந்திரா முதல், கன்னியாகுமரி வரை, மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் விரிஞ்சிப்புரத்தில் 10 செ. மீ. மழையும், புதுக்கோட்டை செங்கம் ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழையும், ஊத்தங்கரையில் 6 செ.மீ., சாத்தனூர் அணைக்கட்டு, தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.