
சென்னையில் உள்ள ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படும் என்ற ஒரு தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஏரிகள் நிரம்பவில்லை எனவும் மக்கள் யாரும் வதந்திகளை நம்பி அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை புறநகரில் உள்ள ஏரிகளின் கொள்ளளவு மற்றும் அவற்றின் தற்போதைய நிலவரம் குறித்து பார்ப்போம்.
சென்னை மாநகரின் நீராதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஆகிய ஏரிகள் 10% முதல் 20% மட்டுமே நிரம்பியுள்ளது. எனவே ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படும் என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
3.2 டி.எம்.சி முழு கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 360 மில்லி கன அடி மட்டுமே தற்போது வரை நிரம்பியுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 3,645 மில்லி கன அடி. இதில், 749 மில்லி கன அடி மட்டுமே தற்போது வரை நிரம்பியுள்ளது.
அதேபோல் 3,300 மில்லி கன அடி முழு கொள்ளளவு கொண்ட புழல் ஏரி, தற்போது வரை 747 மில்லி கன அடி மட்டுமே நிரம்பியுள்ளது.
எனவே ஏரிகள் உடைந்து வெள்ளம் ஏற்படும் என மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.