குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக கிடந்த ஆதார் அட்டைகள், தபால்கள் – பேரதிர்ச்சியில் மக்கள்…

 
Published : Nov 03, 2017, 11:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
குப்பைத் தொட்டியில் மூட்டை மூட்டையாக கிடந்த ஆதார் அட்டைகள், தபால்கள் – பேரதிர்ச்சியில் மக்கள்…

சுருக்கம்

aadhar and post are threw in garbage

 

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் குப்பையில் ஆதார் அட்டைகள், தபால்கள் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், நேதாஜி சாலையில் துப்புரவுப் பணியாளர்கள் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் மூன்று மூட்டைகள் கிடந்தன, அதனை எடுத்துவந்து நகராட்சி துப்புரவு அறைக்கு அருகில் வைத்திருந்தனர்.

இந்த மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது மூட்டைகளில் மக்களுக்கு வழங்க வேண்டிய ஏராளமான ஆதார் அட்டைகள் இருந்ததை கண்டு பணியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

மேலும், கடந்த 2015-16-ஆம் ஆண்டில் அகசிப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கனகமுட்லு தபால் நிலையத்திற்கு உண்டான தபால்கள் அனைத்தும் மக்களுக்கு வழங்காமல் இருந்தது தெரிய வந்துள்ளது.

இந்தக் குப்பை மூட்டையில் ஆதார் அட்டைகள், கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரியில் இருந்து வழங்கப்படும் அழைப்பு மற்றும் அறிவிப்பு கடிதங்கள், வங்கிகளில் இருந்து அனுப்பப்படும் உத்தரவு தபால்கள் மற்றும் நகை ஏல அறிவிப்பு தபால்கள் என பல்வேறு தபால்கள் இருந்தது. இதைக் கண்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

தபால்களை மக்களுக்கு ஒப்படைக்காமல் குப்பையில் வீசிச் சென்ற தபால்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?