சென்னையில் தனியார் மருத்துவமனை  சாரம் இடிந்து விழுந்து விபத்து.. 17 பேர் மீட்பு…ஒருவர் பலி !! 

First Published Jul 22, 2018, 12:15 AM IST
Highlights
chennai hospital accidemt one dead 17 rescue


சென்னை கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டிடத்தில் நடந்த கட்டிட பணியின் பொழுது தூண் மற்றும் சாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  இதில் 35 பேர் சிக்கியதில் 17 பேர்  உடனடியாக மீட்கப்பட்டனர். எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை கந்தன்சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள்  நடைபெற்று வந்தன. அந்த கட்டிடத்தின் 4வது மாடியில் ஜெனரேட்டா் வைப்பதற்கான பணிகளில் 40 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனா்.

மாலை 6.30 மணியளவில் 35 போ் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் கட்டிடத்தின் சாரம் மற்றும் தூண் ஆகியவை பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் 35 போ் சிக்கி காயமடைந்தனா். 

இது  குறித்து தகவல் அறிந்த காவல் துறையினரும்,  தீயணைப்பு வீரா்களளும்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களில் முதல் கட்டமாக 10 பேரும் அடுத்ததாக 7 பேரும் மீட்கப்பட்டனா். அவா்கள் பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளா்கள் ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்று கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காயமடைந்தவா்களில் 2 போ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

click me!