நீதிமன்ற அதிரடி உத்தரவு..யாராக இருந்தாலும் அனுமதி கிடையாது.. நகரத்தை குப்பை காடாக்க முடியாது..

Published : Feb 16, 2022, 02:34 PM IST
நீதிமன்ற அதிரடி உத்தரவு..யாராக இருந்தாலும் அனுமதி கிடையாது.. நகரத்தை குப்பை காடாக்க முடியாது..

சுருக்கம்

தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்கக் கூடாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தால் அதை அகற்ற ஏற்படும் செலவை வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும் போஸ்டர் ஓட்டுபவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  

தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்கக் கூடாது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம், போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தால் அதை அகற்ற ஏற்படும் செலவை வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் எனவும் போஸ்டர் ஓட்டுபவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னை மாநகராட்சியின் 117 வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆறுமுகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், சென்னை மாநகராட்சி 117-வது வார்டில் தேர்தலில் பிரச்சாரத்துக்காக ஒட்டப்பட்ட தனது போஸ்டர் மீது திமுக வேட்பாளர் போஸ்டர் ஒட்டியுள்ளதாகவும் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அனுமதியின்றி சுவர்களில் போஸ்டர்கள் ஒட்ட தடை உள்ளதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், 'நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்காக விதிகளை மீறி போஸ்டர்கள் ஓட்ட எவருக்கும் அனுமதிக்க கூடாது என சென்னை மாநகராட்சிக்கும், காவல் ஆணையருக்கு உத்தரவிடுகிறோம். அரசு சுவர்களில் போஸ்டர் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தால் அதை அகற்ற ஏற்படும் செலவை வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். போஸ்டர் ஓட்டுபவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். தனியாருக்கு சொந்தமான சுவர்களில் அனுமதி பெற்றே போஸ்டர் ஒட்டப்பட வேண்டும். தேர்தலின் பெயரால் நகரை குப்பை காடாக்கக் கூடாது. உத்தரவை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்பாளர்கள் அரசு கட்டிட சுவர்கள், தனியார் சுவர்களில் அனுமதி இன்றி போஸ்டர் ஓட்டக்கூடாது என விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுகிறோம்" என்று கூறியதோடு, மேற்கண்ட உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து வரும் 21ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கும், சென்னை மாநகராட்சிக்கும் ஆணை பிறப்பித்து வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!