அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு செல்லும்.. எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி..

By Thanalakshmi VFirst Published Apr 7, 2022, 11:23 AM IST
Highlights

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 7.5% உள் ஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மறு ஆய்வு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் 7.5% உள் ஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மறு ஆய்வு செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தங்களுக்கும் 7.5% இட ஒதுக்கீடு  வழங்க வேண்டும் என்று அரசு உதவி பெறும் பள்ளிகள் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது,

இந்த வழக்கை விசாரத்தி வந்த தலைமை நீதிபதி மூனிஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி தலைமையினா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு அதிகாரங்கள் உண்டு என்பதால், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கிய 7.5% உள் ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் 5 ஆண்டுகளுக்கு பிறகு இடஒதுக்கீடு குறித்து மறு ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடிற்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

click me!