மக்களே உஷார்... குடையோடு வெளியே போங்க... சென்னையை நெருங்கியது புயல்!

By thenmozhi gFirst Published Nov 11, 2018, 1:18 PM IST
Highlights

தமிழகத்தில் தற்போது குளிர் தொடங்கிவிட்டதால் பலரும் இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை பொய்த்து விட்டதே என புலம்ப தொடாங்கி விட்டனர்.

தமிழகத்தில் தற்போது குளிர் தொடங்கிவிட்டதால் பலரும் இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை பொய்த்து விட்டதே என புலம்ப தொடாங்கி விட்டனர்.

ஆனால் தற்போது புதியதாக புயல் சின்னம் உருவாகி இருப்பதால் தமிழகத்திற்கு அடுத்து இரண்டு நாட்களில் நல்ல மழை இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. வடமேற்கு திசையைநோக்கி நகர்ந்து வருகிறது. 

புதிதாக உருவாகி உள்ள கஜா புயல், 2 அல்லது 3 நாட்களில் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது  என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் 15 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தற்போது சென்னைக்கு கிழக்கே 930 கி.மீ தொலைவில் 'கஜா' புயல் மையம் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், தமிழகம் மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் நவ.15ம் தேதி முற்பகலில் கடலூர், ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும்  என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் இதே போன்று ரெட் அலர்ட்  அறிவிக்கும் போது பயங்கர வெயில் காய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!