சென்னையில் 250 இடங்களுக்கு ஆபத்து! இதுல உங்க ஏரியா வருதான்னு பாருங்க..!

Published : Sep 27, 2018, 05:39 PM ISTUpdated : Sep 27, 2018, 05:57 PM IST
சென்னையில் 250 இடங்களுக்கு ஆபத்து! இதுல உங்க ஏரியா வருதான்னு பாருங்க..!

சுருக்கம்

தொடங்க உள்ள வட கிழக்கு பருவ மழை காரணமாக சென்னையில் மட்டும் 250 இடங்கள் வெகுவாக பாதிக்கும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

தொடங்க உள்ள வட கிழக்கு பருவ மழை காரணமாக சென்னையில் மட்டும் 250 இடங்கள் வெகுவாக பாதிக்கும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை இயல்பாக தான் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இருந்தபோதிலும் தமிழகம் முழுவதும் நான்காயிரத்திற்க்கும் அதிகமான இடங்கள் பாதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

 

அதே நேரத்தில் சென்னையில் மட்டும், 250 இடங்கள் மழை வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என  அமைச்சர் உதயகுமார் தெரிவித்து உள்ளார். இதனை தொடர்ந்து, இதுவரை 8417 நீர்நிலை ஆக்கிரமிப்புகள், 6534 மேம்பாலங்களில் இருந்து வந்த அடைப்புகள் சரி செய்யப்பட்டு உள்ளதாகவும், பாதிப்பு ஏற்படும் பகுதி என கண்டறியப்பட்ட பகுதிகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது.

 

மேலும், நீர்நிலைகளை தூர்வாருதல், ஆற்றங்கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகளை100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் ஆட்களை வைத்து பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. இதே போன்று தடுப்பணை கட்டுவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்து உள்ளார்.

PREV
click me!

Recommended Stories

காலையிலேயே இல்லத்தரசிகள் அதிர்ச்சி! திடீரென 5000 உயர்வு! ரூ.3 லட்சத்தை நோக்கி வெள்ளி! அப்படினா தங்கம் விலை?
அதிகாலையில் அலறிய சென்னை! சினிமாவை மிஞ்சிய பயங்கரம்.! கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரவுடி கொ**லை