செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்து மாட்டிக்கொண்டதால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..

Published : Dec 01, 2023, 06:19 PM IST
செமஸ்டர் தேர்வில் காப்பி அடித்து மாட்டிக்கொண்டதால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்.. அதிர்ச்சி சம்பவம்..

சுருக்கம்

செங்கல்பட்டு எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் காப்பி அடித்து மாட்டிக்கொண்டதால் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் எஸ்.ஆர். எம். பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் கோகுல் ராம் என்ற 19 வயது மாணவரும் இந்த தேர்வை எழுதி உள்ளார்.

இந்த சூழலில் கோகுல் ராம் தேர்வில் காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேர்வு கண்காணிப்பாளரிடம் கோகுல் கையும்களவுமாக மாட்டி உள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனால் அவமானம் அடைந்த கோகுல் ராம் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இது அந்த கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காப்பி அடித்து மாட்டிக்கொண்டதால் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

ரூ.20 லட்சம் லஞ்சம்.. வசமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி.. அடித்து ஆடும் லஞ்ச ஒழிப்புத்துறை.!!

PREV
click me!

Recommended Stories

கந்தன் மலை படத்தில், H.ராஜா-க்கு தகுதியே இல்ல - அமைச்சர் சேகர்பாபு
‘ஒளி பிறக்கும், வெற்றி நிச்சயம்’ சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் துடிப்பான பேச்சு