தமிழகத்தில் 13 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

By SG Balan  |  First Published May 11, 2024, 8:23 AM IST

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.


நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள சமீபத்திய தகவலின்படி, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, காலை 10 மணிவரை லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சூழற்சி நிலவுகிறது என்றும் இதனால் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

click me!