
காஞ்சிபுரம்
போக்குவரத்துத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் காஞ்சீபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் போராட்டம் நேற்றோடு ஐந்தாவது நாளாக தொடர்கிறது.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மத்திய தொழிற்சங்கங்கள் நேற்று காஞ்சீபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்டத் துணைச் செயலாளர் டி.ஸ்ரீதர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஆர்.மதுசூதனன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., எல்.பி.எப்., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.டி.சி.சி.டி.யு. உள்ளிட்ட அனைத்துத் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.