காவிரி நீர் வாங்கித் தராத மத்திய அரசின் கங்கை நீர் விற்பனை…

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 02:34 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
காவிரி நீர் வாங்கித் தராத மத்திய அரசின் கங்கை நீர் விற்பனை…

சுருக்கம்

 

பொள்ளாச்சி,

கங்கை நீர் விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் விடுதலை முன்னணியினர் 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தீபாவளி பண்டிகையின் போது கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை தரிசித்தால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு அனைத்து தபால் நிலையங்களிலும் கங்கை நீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கங்கை நதியின் அசுத்தம் பற்றி மொத்த இந்தியாவிற்கும் தெரியும். அந்த நீரால் பல்வேறு நோய்கள் பரவும் என்று தகவல்கள் ஆங்காங்கே சமூக வலைதளங்களிலும் பரவிய வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில், கங்கை நீர் விற்பனையைக் கண்டித்து பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தை மக்கள் விடுதலை முன்னணியினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் பாட்டிலில் கொண்டு வந்த கங்கை புனித நீரை கீழே ஊற்றி, மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். பின்னர் காவல்துறையினர் தடையை மீறி தபால் நிலையத்தை முற்றுகையிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தம்பு, மாவட்டட இளைஞர் அணி அமைப்பாளர் தென்னரசு உள்பட 17 பேரை காவல்துறையினர் கைது செய்து, திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து மக்கள் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தம்பு கூறியதாவது:–

“மத்திய அரசு கங்கை புனித நீர் என்ற பெயரில் அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்து வருகிறது. இது, இந்துத்துவத்தை பொதுமக்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் திணிக்கும் முயற்சியாகும். இதுபோன்ற செயல்கள் மற்ற மதத்தினரின் மனதை புண்படுத்தும் நோக்கில் இருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசு, கங்கை புனித நீரை தபால் நிலையங்களில் விற்பனை செய்து வருகிறது.

கங்கை நீரை தீர்த்தம் என்ற பெயரில் விறபனை செய்து, மூடநம்பிக்கையை வளர்க்கிறது மத்திய அரசு. எனவே இந்த திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்” என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்