ஊழல் செய்த அமித்ஷா, ஜெய்ஷா மீது சிபிஐ விசாரணை வெச்சே ஆகணும் – காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

 
Published : Oct 13, 2017, 08:37 AM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
ஊழல் செய்த அமித்ஷா, ஜெய்ஷா மீது சிபிஐ விசாரணை வெச்சே ஆகணும் – காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

சுருக்கம்

CBI to probe into Amit Shah and Jaiswal - Congressional demonstration

கடலூர்

ஊழல் புகாரில் சிக்கியுள்ள பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா ஆகியோர் மீது சிபிஐ விசாரணை வேண்டும் என்று கடலூரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய் ஷா ஆகியோர் ஊழல் புகாரில் சிக்கி உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஜெய் ஷா நிறுவனத்தின் சொத்து மதிப்பு 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது.

இதனைக் கண்டித்தும், ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக காங்கிரசு கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்திருந்தார்.

அதன்படி, கடலூர் தலைமை தபால் அலுவலகம் அருகில் கடலூர் மாவட்ட காங்கிரசு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் இராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் குமார் வரவேற்றுப் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் இளஞ்செழியன், சொத்து மீட்புக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகரன், மாவட்டப் பொருளாளர் ராஜன், மாவட்டத் துணைத் தலைவர் வேலுசாமி, பொதுச் செயலாளர் ரவிக்குமார், வட்டாரத் தலைவர்கள் சீத்தாராமன், ராமச்சந்திரன், குணசேகரன், ரமேஷ், நகர தலைவர்கள் திலகர், முருகன், சத்திரியாஸ், வைத்தியநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “ஊழ; புகாரில் சிக்கியுள்ள பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகன் ஜெய் ஷா ஆகியோர் மீது சிபிஐ விசாரணை வேண்டும்” என்று முழக்கங்களை எழுப்பினர்.

PREV
click me!

Recommended Stories

கரூருக்கு போகல.. ஆடியோ லாஞ்சுக்கு மலேசியா போக தெரியுது..? ஈரோட்டுக்கு மட்டும் வர தெரியுதா?விஜயை கலங்கடிக்கும் போஸ்டர்கள்
100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்