Cauvery River Floods: ஆடி அமாவாசையில் பக்தர்களுக்கு தடை! வெளியான ஷாக் தகவல்! என்ன தெரியுமா.?

By vinoth kumar  |  First Published Aug 1, 2024, 9:37 AM IST

ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழுள்ள காவிரி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள கீழ்கண்ட திருக்கோயில்களில் வெள்ள அபாய எச்சரிக்கையினை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.


காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் ஆற்றில் இறங்கி நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்திறை இணை ஆணையர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- ஈரோடு மாவட்டத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழுள்ள காவிரி ஆற்றங்கரை அருகில் அமைந்துள்ள கீழ்கண்ட திருக்கோயில்களில் வெள்ள அபாய எச்சரிக்கையினை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: Schools Holiday:குட்நியூஸ்! ஆகஸ்ட் 3ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

பவானி. அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில். கொடுமுடி அருள்மிகு மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயண பெருமாள் திருக்கோயில், காங்கேயம்பாளையம், அருள்மிகு நட்டாட்ரீஸ்வரர் திருக்கோயில், நஞ்சைகாளமங்கலம், அருள்மிகு மத்தியபுரிஸ்வரர் கல்யாண வரதராஜ பெருமாள் அருள்மிகு குலவிளக்கம்மன் திருக்கோயில், அம்மாபேட்டை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோயில், ஊஞ்சலூர், அருள்மிகு மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நஞ்சை கிளாம்பாடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் மற்றும் காவிரி ஆற்றங்காரையின் அருகே உள்ள சிறிய திருக்கோயிலுக்கு வரும் பக்கதர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: Power Shutdown in Chennai: சென்னையின் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

மேலும், எதிர்வரும் 03.08.2024 மற்றும் 04.08.2024 ஆகிய தேதிகளில் ஆடி 18 மற்றும் ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை உள்ள காலங்களில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் இறங்கி புனித நீராட தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!