திருவள்ளூர் சோதனைச் சாவடியில் சிக்கிய பணம்...

 
Published : Dec 09, 2017, 11:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
திருவள்ளூர் சோதனைச் சாவடியில் சிக்கிய பணம்...

சுருக்கம்

cash recovered from thiruvallur check post

திருவள்ளூர் அருகே சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.81 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 
பணம் மட்டுமல்லாது,  முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் தீவிர சோதனையின் போது, அங்கு இருந்த கணக்கில் வராத ரூ.81 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

சோதனைச் சாவடியில் இருந்த முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், சோதனைச் சாவடியின் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. இது வழக்கமான சோதனை என்றாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதால், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளின் சோதனை தீவிர கவனம் பெற்றுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

பால்வாடி கட்சிக்கு பவள விழா கட்சி பதில் சொல்ல முடியாது.. விஜய்யை சப்பையாக்கிய சேகர்பாபு..!
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? நாள் குறித்த தமிழக அரசு!