பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்கள் மீது வழக்கு - ரூ.8 கோடி மோசடி செய்தால் சும்மா விடுவாங்களா?

Asianet News Tamil  
Published : Feb 07, 2018, 06:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஊழியர்கள் மீது வழக்கு - ரூ.8 கோடி மோசடி செய்தால் சும்மா விடுவாங்களா?

சுருக்கம்

Case against former employees of Periyar University - Rs 8 crore fraud?

சேலம்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வி மையங்கள் அமைத்ததில் ரூ.8 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதால் முன்னாள் இயக்குனர் உள்பட நால்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு ரூ.30 இலட்சம் லஞ்சம் பெற்றபோது இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களால் கையும் களவுமாக பிடிபட்டார். அவரை கைது செய்த காவல்துறை, அவருக்கு உடந்தையாக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் அதிரடியாக கைது செய்தது.

இதனைத் தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் நடத்திய விசாரணையில், பல்கலைக்கழகத்தில் பணி நியமனம் மட்டுமல்லாது தொலை தூர கல்வி மையங்கள் அமைத்ததிலும் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோயம்புத்தூர் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் மாயமாகி விட்டதாகவும் அதற்கு காரணமான முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கரிடம் தற்போதைய பதிவாளர் மணிவண்ணன் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக சேலம் மத்திய குற்றப்பிரிவு காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். புகார் கொடுக்கப்பட்ட 3-ஆம் நாள் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள வீட்டில் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் அவர், இறப்பதற்கு முன்பு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு குறித்தும், அதற்கு காரணமானவர்கள் குறித்தும் விரிவான கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார்.

இது தொடர்பாக பெருந்துறை காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வி மையம் அமைத்ததில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக சேலம் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், சேலம் இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் நடத்திய விசாரணையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் 200-க்கும் மேற்பட்ட தொலை தூர கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, பின்னர் அவை மூடப்பட்டதும், அதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டிய சுமார் ரூ.8 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலை தூர கல்வி மையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் குணசேகரன், தமிழ்துறை தலைவர் டாக்டர் மாதையன், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டாளர் டாக்டர் பிரின்ஸ் தன்ராஜ், கொல்கத்தாவை சேர்ந்த ஜெயந்த் முரளி ஆகிய  நால்வர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் இந்த மோசடி நடந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே மேலும், பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முக்கிய ஆவணங்களை சேகரிக்கும் பணியில் காவலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

சிம்பு விக்கெட்டை எடுத்தது நான்தான்! வைரலாகும் முதல்வர் ஸ்டாலின் ஸ்பின் பவுலிங் வீடியோ!
பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!