
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் ஒரு பெண் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும். புதுச்சேரி செல்லும் வாகனங்கள், சுற்றுலாப் பயணிகள் என எப்போதுமே போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில் அடிக்கடி விபத்துகளும் நடப்பதுண்டு.
இந்நிலையில் மாமல்லபுரத்தை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள மணமை கிராமத்தில் நின்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில் காரில் இருந்த பெண் உட்பட மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.. காரில் ஏற்பட்ட தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் மூன்றுபேரின் உடல்களை கருகிய நிலையில் மீட்டனர்.
இது குறித்து கல்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து காரில் இருந்தவர்கள் யார் ? எப்படி விபத்து நடந்தது ? என விசாணை நடத்தி வருகின்றனர்.