கடவுளே இது மாதிரி யாருக்கும் நடக்கக்கூடாது! எமன் ரூபத்தில் வந்த லாரி! அரசு பணி கிடைத்த 10 நாளில் விபத்தில் பலியான சிவரஞ்சினி!

Published : Sep 22, 2025, 09:54 AM IST
madurai accident

சுருக்கம்

ஆசிரியர் பயிற்சி விழாவில் பங்கேற்க சென்னை சென்ற ஆசிரியை சிவரஞ்சினி, விழுப்புரம் அருகே நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். பணியில் சேர்ந்து 10 நாட்களே ஆன நிலையில் நடந்த இந்த சோகத்தில், மேலும் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். 

தமிழகத்தில் கடந்த 2023-24ம் ஆண்டுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களில் சிவரஞ்சினியும் ஒருவர். இவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு பள்ளியில் ஆசிரியராக 10 நாட்களாக பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு பணியாற்றி வரும் 2,715 ஆசிரியர்களுக்கு பயிற்சி தொடக்க விழா நேற்று காலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அரசு ஆசிரியராக பணி நியமனம்

இந்த விழாவில் பங்கேற்பதற்காக விழுப்புரம் தனலட்சுமி கார்டன் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி சிவரஞ்சினி (28)., திருச்சி பாலகரை மல்லிகைபுரத்தை சேர்ந்த நெகர்நிஷா (47), கடலூர் மாவட்டம் நல்லாத்தூரை சேர்ந்த கவுசல்யா (23), கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணியந்தல் பகுதியை சேர்ந்த பூவிழி (35) ஆகியோரும் ஒன்றாக ஒரே காரில் செல்ல முடிவு செய்தனர். இவர்களும் தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து நேற்று அதிகாலை 4.30 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்களுடன் நெகர்நிஷாவின் கணவர் ஷாகுல்அமீது (52), கவுசல்யாவின் கணவர் எல்லப்பன், பூவிழியின் கணவர் முருகன் ஆகியோரும் உடன் வந்தனர். காரை கடலூரை சேர்ந்த சூர்யா (27) என்பவர் ஓட்டி வந்தார்.

கார் விபத்து

கார் அதிகாலை 5 மணியளவில் அய்யூா் அகரம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அங்கு மேம்பால பணிகள் நடந்து வருவதால் ஓட்டுநர் காரை எதிர்திசை சாலையில் திருப்பினார். அப்போது அந்த சாலையில் வந்து கொண்டிருந்த லாரி இவர்களது கார் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சிவரஞ்சினி உட்பட இரண்டு பேர் பலி

இந்த விபத்தில் ஷாகுல்அமீது, ஆசிரியை சிவரஞ்சினி ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் நெகர்நிஷா, கவுசல்யா, பூவிழி, எல்லப்பன், முருகன், கார் டிரைவர் சூர்யா உள்ளிட்ட 6 பேரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு ஆசிரியராக பணியில் சேர்ந்து 10 நாட்களில் சிவரஞ்சினி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்கிறீங்களா? உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி உத்தரவு!
அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!