சேலத்தில் சொந்த உபயோகத்திற்காக கஞ்சா செடி வளர்த்தவர் கைது...

 
Published : Nov 13, 2017, 09:03 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
சேலத்தில் சொந்த உபயோகத்திற்காக கஞ்சா செடி வளர்த்தவர் கைது...

சுருக்கம்

Cannabis planter arrested for own use in Salem

சேலம்

சேலத்தில் சொந்த உபயோகத்திற்காக கஞ்சா செடி வளர்த்தவரை காவலாளர்கள் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த நாய்க்கன் தண்டாவைச் சேர்ந்தவர் ஈரண்ணன் (52).

இவர், வனத் துறையினருடன் யானைகளை விரட்டும் பணிக்குச் செல்வார். இந்த நிலையில், தனது வீட்டின் முன்புறத்தில் கஞ்சா செடிகளை வளர்த்துள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் மேட்டூர் பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், கொளத்தூர் காவலாளர்கள் ஈரண்ணன் வீட்டுக்கு அதிரடியாக சென்றனர். 

அங்கு சோதனையிட்டபோது தங்களுக்கு கிடைத்த புகார் உண்மை என்று உறுதி செய்தனர் காவலாளர்கள். அந்த வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை ஈரண்ணனும் ஒப்புக் கொண்டார்.

பின்னர், அந்த கஞ்சா செடிகளை காவலாளர்கள் அழித்தனர். மேலும், ஈரண்ணன் மீது வழக்குப் பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் காவலாளர்கள்.

 

PREV
click me!

Recommended Stories

ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு