
தமிழக முதல்வர் பூரண குணமடைய வேண்டி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபாடு நடத்தினர்.
தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் பூரண குணமடைய வேண்டி அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி மண்டல அரசு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தர்மபுரி பாரதிபுரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சங்க மண்டல செயலாளர் பரமசிவம் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்கள்.
முதலமைச்சர் பூரண குணமடைந்து மீண்டும் மக்கள் பணியாற்ற வேண்டும் என வேண்டி சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நீண்ட வரிசையில் நின்று அவர்கள் வழிபாடு நடத்தினார்கள்.
இதில் சங்கத் தலைவர் சிவன், பொருளாளர் முனிரத்தினம் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.